கடலாடி தாலுகா 2 ஊர்களில் நாளை "அம்மா' திட்ட முகாம்
கடலாடி தாலுகாவில் 2 ஊர்களில் மே 14 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அம்மா திட்ட மக்கள் தொடர்பு சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
கடலாடி தாலுகாவில் 2 ஊர்களில் மே 14 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அம்மா திட்ட மக்கள் தொடர்பு சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
சாயல்குடி வருவாய் பிர்க்காவைச் சேர்ந்த எஸ்.வாகைகுளம் கிராமத்தில் கடலாடி வட்டாட்சியர் கே.அமிர்தம் தலைமையிலும், கடலாடி வருவாய்ப் பிர்க்காவைச் சேர்ந்த மாரியூரில் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ராஜேஸ்வரி தலைமையிலும் இந்த முகாம்கள் நடைபெறுகின்றன.
மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் உத்தரவில், பரமக்குடி கோட்டாட்சியர் ஆர்.குணா ளன் ஆலோசனையில் இந்த முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்களில், வருமானம், இருப்பிடம், சாதி, வாரிசு உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் பெற பொது மக்கள் மனுக்கள் கொடுக்கலாம். மனுக்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு, உரிய உத்தரவுகள் வழங்கப்படும் என்றும் வட்டாட்சியர் அமிர்தம் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement