ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் 38 இடங்கள் பேரிடரால் பாதிக்கப்படலாம்: ஆட்சியர்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் புயல்,வெள்ளம் போன்ற பேரிடர் ஏற்பட்டால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக 38 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் வியாழக்கிழமை பேசினார்.
  இயற்கைப் பேரிடர்களின்போது பொதுமக்கள் மற்றும் அவர்களின் உடமைகளை காக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்தும் பொருட்டு வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் உள்பட உயர் அதிகாரிகளுக்கு வயர்லெஸ் கருவிகளை வியாழக்கிழமை வழங்கிய  
அவர் பேசியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் புயல்,வெள்ளம் போன்ற பேரிடர் சூழ்நிலைகள் ஏற்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ள  அனைவரும் விழிப்புணர்வுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். 
மாவட்டத்தில் புயல்,வெள்ளம் போன்ற பேரிடரினால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ள பகுதிகளாக 38 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 
அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்களும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக இயற்கை பேரிடர்களின் போது பொதுமக்கள் மற்றும் அவர்களது உடமைகளை காக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்தும் விதமாக கண்காணிப்பு குழுக்களின் முக்கிய அலுவலர்களுக்கு வயர்லெஸ் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இத்தகவல் தொடர்பு சாதனத்தினை திறம்படப் பயன்படுத்தி பேரிடர் காலங்களில் பொதுமக்கள் போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆட்சியர் பேசினார்.
           இந்நிகழ்வின் போது எஸ்.பி.ஓம்பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி, பரமக்குடி சார் 
ஆட்சியர் விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் கோட்டாட்சியர் ரா.பேபி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை,ஊரக வளர்ச்சித்துறை உதவித்திட்ட அலுவலர் மணிமேகலை ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள்!

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

SCROLL FOR NEXT