ராமநாதபுரம்

அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

DIN

பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவர் ஆர்.முருகானந்தம் தலைமை வகித்தார். செயலாளர் இளங்குமரன், பொருளாளர் ஆர்.பாஸ்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 2017-18 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவராக எம்.மணிமாறன், செயலாளர் இ.முகம்மதுஉமர், பொருளாளர் சாலமன்தேவராஜ் ஆகியோரை அச்சங்கத்தின் சிறப்பு விருந்தினர் உபால்ட்ராஜ் மெக்கென்னா அறிமுகம் செய்து வைத்தார்.
 இதனைத் தொடர்ந்து தொழுநோயாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும், ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டன.
விழாவில் பள்ளி கல்விக்குழு தலைவர் ஏ.வி.குமாரசாமி, செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், பொருளாளர் மனோகரன், துணைச் செயலாளர் வி.ஜெகநாதன், வழக்குரைஞர்கள் ஜி.கோபால், கே.தினகரன், குருசண்முகசுந்தரம், டாக்டர் ஏ.ராமதாஸ், கே.ஆர்.பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT