ராமநாதபுரம்

விளைச்சல் பாதிப்பு: கால்நடைகளுக்கு உணவாகும் பருத்தி

DIN

கமுதி பகுதியில் போதிய மழையின்றி கருகிய பருத்தி செடிகள் கால்நடைகளுக்கு உணவாக்கப்பட்டு வருகிறது.
கமுதி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 4 மாதங்களுக்கு முன் கோடை மழை பெய்தது. இதையடுத்து கருங்குளம், பாக்குவெட்டி, மருதங்கநல்லூர், ஆணையூர், பேரையூர், கொல்லங்கும், இலந்தைகுளம், கள்ளிக்குளம், சாமிபட்டி, செங்கோட்டைப்பட்டி, கீழவலசை, செங்கப்படை, புதுக்கோட்டை, தோப்படைப்பட்டி, நெறிஞ்சிப்பட்டி, ஊ.கரிசல்குளம், உள்ளிட்ட 50க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மானாவாரி பயிராக பருத்தி விதைத்தனர். பருத்தி செடிகள் நன்கு வளர்ந்து காய்க்க துவங்கிய சமயத்தில், தேவையான மழை இல்லை.  தற்போது அந்த பருத்தி செடிகள் கருகி வருகின்றன.
இதனால் பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் ஆடு, மாடு, உள்ளிட்ட கால்நடைகளை மேய வைத்து தங்களது வயல்களை சுத்தம் செய்து செடிகளை அழித்து வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த பருத்தியை அழித்துவிட்டு, மழைக் காலம் தொடங்கும்போது மீண்டும் விவசாய பணிகளை துவங்க திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT