ராமநாதபுரம்

கமுதி அருகே மாட்டு வண்டி பந்தயம்

DIN

கமுதி அருகே பெருநாழியில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தென் மாவட்ட அளவிலான மாட்டு வண்டி பந்தயம் திங்கள்கிழமை நடைபெற்றது.
   கமுதி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டகளில் இருந்து பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 18 மாட்டு வண்டிகளும், சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 30 மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன.
  இதில், வெற்றி பெற்றவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சு.ப.திவாகரன் பரிசு வழங்கினார்.
பொதுக்கூட்டம்:  முன்னதாக இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.   பெருநாழியில், கமுதி தெற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலர் சு.ப.த.திவாகரன் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி துணைச் செயலர் முருகவேல், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் பெருநாழி போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   கூட்டத்தில், தலைமைக் கழக பேச்சாளர் முன்னாள் எம்.பி. செல்வேந்திரன், கழக உயர் நிலை செயல் திட்ட குழு உறுப்பினர் சு.ப.தங்கவேலன், மாநில தீர்மான குழு இணை செயலர் சத்தியமூர்த்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.   முன்னதாக, கமுதி தெற்கு ஒன்றிய செயலர் செந்தூர்பாண்டியன் வரவேற்றார். ஒன்றிய துணை செயலாளர் கிழவராஜன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

உன் பார்வையில்..

இளைஞர் பலி: பம்மல் மருத்துவமனையை மூட உத்தரவு

நீலகிரியில் மே 10ல் உள்ளூர் விடுமுறை!

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

SCROLL FOR NEXT