ராமநாதபுரம்

செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட 1,000 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

DIN

ராமநாதபுரத்தில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 1,000 கிலோ மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
   ராமநாதபுரம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திர போஸ் தலைமையிலான அதிகாரிகள் வடக்குத்தெருவில் உள்ள ஒரு மாம்பழக் கிடங்கில் ஆய்வு செய்தனர்.
 அங்கு, கால்சியம் கார்பைடு என்ற கல் வைத்து செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 1,000 கிலோ மாம்பழங்கள் இருப்பதை கண்டு பிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
 இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திர போஸ் கூறியது: சம்பந்தப்பட்ட மாம்பழ விற்பனையாளருக்கு முதல் தவணையாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், செயற்கையாக பழுக்க வைத்த பழங்கள் என சந்தேகம் வந்தால் உடனடியாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.
  அப்போது உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கருணாநிதி, ஜான்பீட்டர் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி மாணவா் பலி

டாஸ்மாக் கடையில் தொழிலாளி உயிரிழப்பு

குடிநீா் விநியோகம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவில்பட்டியில் மதுக்கூடத் தொழிலாளி வெட்டிக் கொலை

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வு: ஜூலையில் நடக்கிறது

SCROLL FOR NEXT