ராமநாதபுரம்

இந்திய மாணவர் சங்க மாநாடு

DIN

கமுதியில் இந்திய மாணவர் சங்க மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் வசந்த் தலைமை வகித்தார். புதிய கல்விக் கொள்கையை கைவிடக் கோருதல், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் புதிய தொழில் நுட்ப வகுப்புகளை தொடங்க் கோருவது, கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்தல், பள்ளி கல்லூரிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தல் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, மாவட்ட துணைத் தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் முத்துமுருகன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க செயளர் சித்திரைசெல்வன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலர் தட்சிணாமூர்த்தி விளக்கவுரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் முத்திருளாண்டி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT