ராமநாதபுரம்

மதுபானக் கடையை மூடக்கோரி முற்றுகைப் போராட்டம்

DIN

பரமக்குடி அருகே எமனேசுவரம் ஜீவாநகரில் பள்ளி மற்றும் கோயில்கள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ள மதுபானக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பரமக்குடி பகுதியில் இருந்த 8 மதுபானக் கடைகளில் 6 கடைகள் அகற்றப்பட்டன.  
இதில் எமனேசுவரம் ஜீவாநகர் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி, கோயில்கள் உள்ள நயினார்கோவில் சாலையில் அமைந்துள்ள மதுபானக் கடை அகற்றப்படவில்லை. இதனை அகற்ற வேண்டும் என ஏப்ரல் 23-ஆம் தேதி அப்பகுதி மக்கள் அக்கடை அமைந்துள்ள பகுதி மற்றும் எமனேசுவரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் துணைக் கண்காணிப்பாளர் பெ.காளிமுத்தன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்பின்னரும் கடை அகற்றப்படவில்லை. இதைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை அங்கிருந்த மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என கடை முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நயினார்கோவில் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மதுபானக் கடைக்கும் மாற்று இடம் பார்க்கப்படுகிறது. அங்குகொண்டு செல்லும்வரை இங்குள்ள கடை திறக்கப்படாது என வட்டாட்சியர் எஸ்.ராஜகுரு இங்குள்ள உத்தரவாதம் அளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT