முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடி அருகே குழாய் உடைந்து வீணாகும் காவிரி கூட்டுக் குடிநீர்: ஒரு மாதமாக நீடிக்கும் அவலம்

பரமக்குடி அருகே மேலக்காவனூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக காவிரிக் கூட்டுக்குடிநீர் குழாய் சேதமடைந்து குடிநீர் சாலையில் பாய்ந்து வீணாகிறது. மேலும் சாலையும் சேதமடைந்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

பரமக்குடி அருகே மேலக்காவனூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக காவிரிக் கூட்டுக்குடிநீர் குழாய் சேதமடைந்து குடிநீர் சாலையில் பாய்ந்து வீணாகிறது. மேலும் சாலையும் சேதமடைந்துள்ளது.
    மேலக்காவனூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.
   இவ்வாறு வெளியேறும் நீர் சாலையில் தேங்குவதால் சாலை முழுவதும் சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் இப்பள்ளம் ஏற்பட்டிருப்பது தெரியாமல் இருசக்கர வாகனங்களில் வருவோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய பாராமரிப்புத்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
 கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வெளியேறி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.  பரமக்குடி, முதுகுளத்தூர் பகுதி கிராமப்புற மக்களுக்கு குடிநீர் முறையாக வழங்கப்படாத  நிலையில், குடிநீர் வீணாவது உடனடியாக தடுக்கப்பட வேண்டும் என்றும் சேதமடைந்த சாலையையும் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →