முகப்பு
ராமநாதபுரம்

கல்வி மாவட்ட தனித்திறன் போட்டிகள்: பரமக்குடி பள்ளி மாணவர்கள் முதலிடம்

பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற தனித்திறன் போட்டிகளில்  பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள்முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற தனித்திறன் போட்டிகளில்  பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள்முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
 இப்பள்ளியில் பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் தனித்திறன் போட்டிகள் நடைபெற்றன. இதில் இப்பள்ளி மாணவ,மாணவிகள் பல்வேறு போட்டிகளில் முதலிடம் பெற்றுள்ளனர்.
   பாட்டுப்போட்டியில் ஜி.சபீதா, தனி நடிப்பில் ஆர்.கலைவாணன், இசைக்கருவி வாசித்தல்  எம்.மோசஸ்ஞானராஜ்,  கட்டுரைப்போட்டியில் பி.விஷ்ணுபிரியன், பேச்சுப்போட்டியில் பி.தேவ்ஆனந்த், கவிதைப் போட்டியில் எஸ்.சுல்தானாஜாஸ்மின், பரத நாட்டியத்தில் டி.சந்தனா, விநாடிவினா போட்டியில் எஸ்.சண்முகப்பிரியா,  கிராமிய நடனத்தில் ஏ.பிரியதர்சினி ஆகியோர் முதலிடம் பெற்றவர்கள் ஆவர்.  வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளை பள்ளியின் தாளாளர் எம்.சாதிக்அலி, தலைமையாசிரியர் எம்.அஜ்மல்கான், உதவித் தலைமையாசிரியர்கள் எம்.புரோஸ்கான், ஏ.காஜாமுகைதீன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டி கெளரவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →