முகப்பு
உலகம்

ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை

ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பற்றி...

Updated On : 10 மார்ச் 2026, 9:13 am IST
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - AP
பகிர்:

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் எண்ணெய் போக்குவரத்தை முடக்க நினைத்தால் இதுவரை தாக்கப்பட்டதைவிட ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் போர் காரணமாக பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்திருந்தது.

மேலும், தடையை மீறி எண்ணெய் கொண்டு செல்ல நினைத்தால் கப்பலை தாக்கி அழிப்போம் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

Advertisement

Advertisement

இதனிடையே, பாரசீக வளைகுடா வழியாகப் பயணிக்கும் அனைத்துக் கப்பல்களுக்கும், குறிப்பாக எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களுக்கு கடற்படைப் பாதுகாப்பு மற்றும் காப்பீடு வழங்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

இருப்பினும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மட்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், சமூக ஊடகப் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் எண்ணெய் போக்குவரத்தை முடக்க நினைத்தால், ஈரான் மீது இதுவரை தாக்கப்பட்டதைவிட 20 மடங்கு கடுமையாக தாக்குதல் நடத்துவோம்.

மீண்டும் ஒரு நாடாக ஈரான் கட்டியெழுப்ப முடியாத நிலையை உருவாக்கும் வகையில், எளிதில் அழிக்கக்கூடிய இலக்குகளை தகர்ப்போம்.

மரணமும், நெருப்பும், ஆக்ரோஷமும் ஈரான் மீது பொழியும். ஆனால், இதெல்லாம் நடக்கக் கூடாது என்று நம்புகிறேன், பிரார்த்தனை செய்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

summary

We will attack Iran 20 times more often! Trump warns

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments