முகப்பு
ராமநாதபுரம்

பாம்பூர் சமத்துவபுரம் சமுதாயக் கூடத்தை சுற்றி கழிவுநீர் தேக்கம்: கொசுக்களால் தொற்றுநோய் பரவும் அபாயம்

பரமக்குடி ஒன்றியம் பாம்பூர் சமத்துவபுரத்தில் கழிவுநீர் தேங்கி, புதர் செடிகள் அடர்ந்து காணப்படுவதால் கொசுக்களால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

பரமக்குடி ஒன்றியம் பாம்பூர் சமத்துவபுரத்தில் கழிவுநீர் தேங்கி, புதர் செடிகள் அடர்ந்து காணப்படுவதால் கொசுக்களால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    பரமக்குடி வட்டத்தில் முதன் முதலில் துவங்கப்பட்டது பாம்பூர் பெரியார் நினைவு சமத்துவபுரம். இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கடந்த 2013-14 ஆம் நிதியாண்டில் ரூ. 3.85 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டடம் கட்டி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. இச்சமுதாயக்கூடத்தில் திருமண நிகழ்ச்சிகள், காதுகுத்து உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளும், அரசு சார்பில் சமுதாய விழிப்புணர்வு கூட்டங்களும் , இலவச மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்று பொதுமக்கள் கூடும் இடமான இச்சமுதாயக் கூடத்தைச் சுற்றிலும் அப்பகுதியில் உள்ள
   குடிநீர் குழாய் சேதமடைந்து, அதிலிருந்து வெளியேறும் நீர் குளம்போல் தேங்கியுள்ளது.  மேலும் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களின் கால்நடைகளும் அங்கு கட்டப்பட்டு, அதன் கழிவுகளும் சமுதாயக்கூடம் அருகிலேயே கொட்டப்படுவதால் தேங்கியுள்ள தண்ணீர் கழிவு நீராகி, கொசுக்கள் உருவாகும் இடமாக மாறியுள்ளது. இச்சமுதாயக்கூட கட்டடத்தை முறையாக பராமரிக்காததால் சுற்றிலும் புல் புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது.
 இதனால் இங்கு கொசுக்களால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே தொற்றுநோய் பரவும் அபாயநிலையில் உள்ள சமுதாயக்கூட கட்டடத்தைச் சூழ்ந்து தேங்கியுள்ள கழிவுநீர், புதரை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →