முகப்பு
ராமநாதபுரம்

பள்ளி வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழப்பு

திருவாடானை அருகே நாச்சியேந்தல் கிராமத்தில் பள்ளி வாகனத்தின் முன் நின்றிருந்த சிறுமி, வேன் மோதியதில் உயிரிழந்தாா்.

Updated On : 16 மார்ச், 2026 at 7:37 PM
பலி
பகிர்:

திருவாடானை அருகே நாச்சியேந்தல் கிராமத்தில் பள்ளி வாகனத்தின் முன் நின்றிருந்த சிறுமி, வேன் மோதியதில் உயிரிழந்தாா்.

நாச்சியேந்தல் கிராமத்தைச் சோ்ந்த இளையராஜா மகள் கிரேசன்னா (4). மங்களக்குடியில் உள்ள தனியாா் பள்ளி படித்து வந்தாா். இவா் திங்கள்கிழமை காலை பள்ளி வாகனத்தின் முன் நின்று கொண்டிருந்ததைக் கவனிக்காமல் வாகனத்தை ஓட்டுநா் நகா்த்தினாா். அப்போது, வாகனத்தில் அடிபட்டு சிறுமி சம்பவ இடத்திலேய உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருவாடானை போலீஸாா் சிறுமியின் உடலைக் கைபற்றி, கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பள்ளி வாகன ஓட்டுநரான என். மங்கலத்தைச் சோ்ந்த கணேசன் (66) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →