முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் தினமும் நிலவேம்புக் குடிநீர் விநியோகம்

ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்புக் குடிநீர் தினமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மை  நீதிபதி  ஏ.கயல்விழி  தெரிவித்தார்.  

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்புக் குடிநீர் தினமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மை  நீதிபதி  ஏ.கயல்விழி  தெரிவித்தார்.  
    ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட சுகாதாரத்துறை ஆகியன இணைந்து மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்க ஏற்பாடு செய்திருந்தன.
 அதன்படி புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.கயல்விழி துவக்கி வைத்து  பேசியதாவது:  நிலவேம்புக் குடிநீர் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அது மட்டுமில்லாமல் பல்வேறு நோய்களுக்கும் அது சிறந்த மருந்தாகும். காய்ச்சலுக்கு மட்டும் தான் நிலவேம்புக் குடிநீர் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
     வழக்குரைஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்புக் குடிநீர் தினமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
  நிகழ்ச்சியில் தலைமைக் குற்றவியல் நீதிபதி டி.வி.அனில்குமார், மாவட்ட உரிமையியல் நிதிமன்ற  நீதிபதி  கே.எஸ்.ராஜேஷ்குமார், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பார்த்தீபன், சித்த மருத்துவர்கள் சுஜாதா,புகழேந்தி உள்பட வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →