திருவாடானை தாலுகாவில் பயிர்காப்பீடு இழப்பீடு கிடைக்கவில்லை: கடன் பெற்ற விவசாயிகள் புகார்
திருவாடானை தாலுகா முழுவதும் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்ற விவசாயிகள், பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கப்படாததால் கவலை அடைந்துள்ளனர்.
திருவாடானை தாலுகா முழுவதும் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்ற விவசாயிகள், பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கப்படாததால் கவலை அடைந்துள்ளனர்.
திருவாடானை தாலுகாவில் சுமார் 31 தொடக்க வேளாண் கூட்டுற வு கடன் சங்கங்கள் உள்ளன. இவற்றில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினராகி சம்பா பருவ சாகுபடிக்கு கடன் பெற்று உள்ளனர்.
கடந்த ஆண்டு இந்த விவசாயிகள் பயிர் காப்பீடு தொகை செலுத்தியிருந்தனர். இந்நிலையில் கடன் பெறாத விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வருவாய் கிராமத்திற்கு தகுந்தவாறு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் கடன் பெற்ற விவசாயிகளுக்கு இது வரை பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இது சம்பந்தமாக விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்தவித பயனும் இல்லை.
இந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்ய மாவட்ட நிர்வாகம் கடைசி தேதி நவம்பர் 30 ஆம் தேதி என்று அறிவித்துள்ள நிலையில் எனன செய்வது என்று புரியாமல் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கடந்த ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.