முகப்பு
ராமநாதபுரம்

தொண்டியில் தமுமுக நிர்வாகிகள் கூட்டம்

தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நிர்வாகிகள் கூட்டம் மற்றும்  புதிய நிர்வாகிகள் தேர்வு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நிர்வாகிகள் கூட்டம் மற்றும்  புதிய நிர்வாகிகள் தேர்வு புதன்கிழமை நடைபெற்றது.
     இக்கூட்டத்தில்  மாவட்டத் தலைவர் அன்வர் அலி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டச் செயலாளர் சாதிக் பாட்சா முன்னிலை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் முகம்மது கவுஸ் மற்றும் மாவட்டச் செயலாளர் அப்பாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
    தொண்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தவும், பெண் மருத்துவர் நியமனம் செய்யவும், அரசு கல்லூரி அமைக்கவும், டெங்கு காய்ச்சல் பரிசோதனை மையம் அமைக்கவும், கந்துவட்டி கும்பல் மீது  நடவடிக்கை எடுக்கவும்  அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
 தொண்டி,நம்புதாளை,சோழியக்குடி,விஎல் மடம்,புதுபட்டினம், எம் ஆர் பட்டினம், பிவி.பட்டினம் பாசிபட்டினம், வெள்ளையபுரம், மங்களக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  
          இதில், தமுமுக ,மமக ஒன்றியத் தலைவராக சாகுல் ஹமீது,ஒன்றியச் செயலாளராக தொண்டி ராஜ், தமுமுக செயலாளராக கமால் முஸ்தாபா, பொருளாளராக முகம்மது அலி ஆகியோர் தேர்வு செய்யபட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →