ராமநாதபுரம்

தியாகவன்சேரி கிராமத்தில் முளைப்பாரித் திருவிழா

DIN

ராமநாதபுரம் அருகே தியாகவன்சேரியில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரித் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
    இக் கோயில் முளைப்பாரித் திருவிழா, கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி காப்புக்கட்டுதல் மற்றும் முத்துப்பரப்புதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, பூங்கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    இதனைத் தொடர்ந்து, பெண்களின் கும்மியாட்டம், ஒயிலாட்டம் ஆகியனவும் நடைபெற்றன. பின்னர்,  முளைப்பாரி ஊர்வலம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கிராமக் கண்மாயில் நீராட்டும் நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை, தியாகவன்சேரி கிராமத்தினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT