ராமநாதபுரம்

தேவர் குருபூஜை விழா: கையில் காப்பு கட்டிய மாணவர்களுக்கு பள்ளியில் அனுமதி மறுப்பு

DIN

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேவர் குருபூஜை விழாவிற்கு கையில் மஞ்சள் காப்பு கட்டி வந்த மாணவர்களை திங்கள்கிழமை அனுமதிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை மற்றும் ஜயந்தி விழாவை முன்னிட்டு முதுகுளத்தூர்,கடலாடி,சாயல்குடி பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் மாலை அணிவித்து கையில் காப்பு கட்டி விரதம் இருந்து,அக்னி சட்டி,பால்குடம்,பூக்குழி,முளைப்பாரி என விழா எடுத்து வருவது வழக்கம்.
இந்நிலையில் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட சமுதாய மாணவர்கள் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வரும் போது மாலை அணிவித்து கையில் மஞ்சள் காப்புடன் காலையில் பள்ளிக்குள் சென்றனர். அப்போது பள்ளியின் நிர்வாகத்தினரும், ஆசிரியர்களும் கையில் காப்பு கட்டிக்கொண்டு வரும் மாணவர்களை பள்ளிக்குள் செல்ல அனுமதிக்க மட்டோம் என கூறினர். இதனால் மதியம் 12 மணி வரை 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்குள் செல்லாமல் வளாகத்தில் முன் நின்றதால் பொதுமக்கள் கூடினர். இதனால் பள்ளிக்கு முன் பரபரப்பு ஏற்பட்டது.
பின் ஆப்பநாடு மறவர் சங்க தலைவர் மயில்மணிபாண்டியன், காவல்துறையினர்ஆகியோர் ஆசிரியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின் காப்பு கட்டிய மாணவர்களுக்கு அக்டோபர் 30-ஆம் தேதி வரை வருகை பதிவு செய்யப்படும்.
பள்ளிக்கு மாணவர்கள் வர தேவையில்லை என பள்ளியின் நிர்வாகத்தினர் கூறினர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் என பெற்றோôர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

SCROLL FOR NEXT