ராமநாதபுரம்

இருதரப்பினரிடையே மோதல்: 3 பேர் கைது

DIN

கமுதி அருகே முன் விரோதம் காரணமாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
 கமுதியை அடுத்த முதல்நாடு கிராமத்தைச் சேர்ந்தவர் போஸ் மனைவி நாகராணி (58). இவரது குடும்பத்துக்கும் அதே ஊரைச் சேர்ந்த உறவினரான மாரி குடும்பத்துக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை நாகராணி தனது வீட்டருகே நின்று கொண்டிருந்தார்,. அப்போது, மாரியின் மகன்கள் வேல்முருகன், முத்துக்கிருஷ்ணன், மாரியின் மனைவி அன்னபூரணம் ஆகிய 3 பேரும் அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் நாகராணியை தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த அவர், மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், நாகராணியின் மகன் காளீஸ்வரன், உறவினர் ராமலிங்கம் ஆகியோர் மாரி குடும்பத்தாரை பதிலுக்கு 
தாக்கியுள்ளனர். இதில், வேல்முருகன் காயமடைந்து, கமுதி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
 இதுகுறித்து நாகராணியும், வேல்முருகனும் கமுதி காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து வேல்முருகன், காளீஸ்வரன், ராமலிங்கம் ஆகியோரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT