முகப்பு
ராமநாதபுரம்

கமுதி அருகே தற்கொலை செய்த மாணவியின் சடலம் அதிகாரிகளுக்கு தெரியாமல் தகனம்: பெற்றோர், உறவினர்கள் மீது வழக்குப்பதிவு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் உடலை அதிகாரிகளுக்கு தெரியாமல் தகனம் செய்த

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் உடலை அதிகாரிகளுக்கு தெரியாமல் தகனம் செய்த உறவினர்கள் 5 பேர் மீது போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பூமாவிலங்கை கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி மகள் முத்துலெட்சுமி (17). இவர் கமுதி தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் கடந்த 23-ஆம் தேதி வயிறு வலி காரணமாக வீட்டில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாமல், முத்துலெட்சுமியின் சடலத்தை தகனம் செய்துள்ளனர். 
இதுகுறித்து சீமனேந்தல் குரூப் கிராம நிர்வாக அலுவலர் சரவணக்குமார் கமுதி காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் அளித்துள்ளார். அதன்பேரில் முத்துலெட்சுமியின் தந்தை முனியசாமி, தாயார் வள்ளி, மற்றும் உறவினர்கள் அரியப்பன், முருகன், ராமமூர்த்தி உள்ளிட்ட 5 பேர் மீது  கமுதி போலீஸார்   விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →