ராமநாதபுரம்

விஷம் குடித்த விவகாரம்: திருநங்கை காவலரிடம் டிஎஸ்பி விசாரணை

DIN

ராமநாதபுரத்தில் ஆயுதப்படை பிரிவில் ஏற்பட்ட பிரச்னையில் விஷம் குடித்த திருநங்கை காவலரிடம் காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளிக்கிழமை விசாரண நடத்தினார்.  
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த திருநங்கை நஸ்ரியா,  ராமநாதபுரம் ஆயுதப்படைப் பிரிவு காவலராக உள்ளார். அவர் சில நாள்களுக்கு முன்பு திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதை செல்லிடப்பேசியில் படம் பிடித்து சமூக வலை தளங்களில் பரவவிட்டார்.
இது தொடர்பாக துணைக் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த பின்னர் புகாருக்கு உள்ளானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினரும் வியாழக்கிழமை காவல் கண்காணிப்பாளரிடம் மனுக் கொடுத்தனர்.  
இதற்கிடையே, நஸ்ரியாவிடம் வெள்ளிக்கிழமை காலை துணைக் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை நடத்தினார். மேலும் அவர் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து  நஸ்ரியா பணிக்கு திரும்பியுள்ளார். டிஎஸ்பி அறிக்கை அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் நேரடியாக விசாரணை நடத்திய பிறகே நடவடிக்கை இருக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT