ராமநாதபுரம்

ஓமனில் தொண்டி மீனவர் சாவு

DIN

ஓமன் நாட்டில் மீன் பிடித்தபோது விபத்தில் உயிரிழந்த தொண்டி மீனவர் உடலை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  திருவாடானை தாலுகா தொண்டி அருகேயுள்ள புதுக்குடியைச் சேர்ந்தவர் காட்டுமந்திரி (30). கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஓமன் நாட்டிற்கு மீன் பிடி தொழிலுக்காக சென்றுள்ளார். இவர் கடந்த திங்கள்கிழமை ஓமன் நாட்டு கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது படகில் இருந்த சிலிண்டர் வெடித்து உயிரிழந்தார். அவரது உடலை ஓமன் நாட்டு அரசு தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் காட்டுமந்திரியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT