ராமநாதபுரம்

ராமேசுவரம் நகராட்சியில் தனி வார்டுகள் ஒதுக்க கோரிக்கை

DIN

ராமேசுவரம் நகராட்சியில் பகுதியில் அருந்ததியர் மக்களுக்கு அரசு வழங்கிய 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் இரண்டு வார்டுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஆதிதமிழர் பேரவை நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமேசுவரத்தில் ஆதிதமிழர் பேரவை நிர்வாகிகள் கூட்டம் எம்.கே.நகரில் உள்ள சமூதாய கூடத்தில் இயைஞரணி செயலாளர் சே.விடுதலை குமரன் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர் தலைவர் சுப்பிரமணியன், நகர் செயலாளர் உ.பூமிநாதன்,இயைஞரணி நிர்வாகிகள் பிரபு,ரமேஷ்,சேது,ராமன்,குமரன் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் ராமேசுவரம் நகராட்சி பகுதியில் வசிக்கும் அருந்ததியர் மக்களுக்கு அரசு வழங்கிய 3.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டின் படி ஆண்கள்,பெண்கள், என இரண்டு தனி வார்டு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அருந்ததியர் அதிகளவில் வசிக்கும் சத்தயாநகர்,டி.எஸ்.எம்.எல் நகர்,எம்ஜிஆர் நகர்,ஒண்டிவீரன்,லெட்சுமி,பெரியாளர் நகர் உள்ளிட்ட பகுதிகளை ஒன்றிணைத்து வார்டுகள் உருவாக்கப்பட வேண்டும்.
நகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை உயர்த்தியதை ரத்து செய்து வழக்கமான முறையில் வசூல் செய்ய
வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். இணைஞரணி நிர்வாகி கோபி நன்றிவுரை கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

SCROLL FOR NEXT