முகப்பு
ராமநாதபுரம்

தங்கம் என நினைத்து பெண்ணிடம் கவரிங் நகை பறித்த 2 இளைஞர்கள் கைது

சாயல்குடியில் தங்கம் என நினைத்து பெண்ணிடம் கவரிங் நகையை பறித்த இரு இளைஞர்களை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீஸாரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனர்.

Updated On : 9 ஜூலை, 2018 at 6:50 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

சாயல்குடியில் தங்கம் என நினைத்து பெண்ணிடம் கவரிங் நகையை பறித்த இரு இளைஞர்களை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீஸாரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனர்.
கடலாடி அருகே உள்ள ஏ.பாடுவனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் லெட்சுமி (50). இவர், சாயல்குடியில் உள்ள உறவினரை பார்க்க வந்துள்ளார். அங்கு பேருந்தை விட்டு இறங்கி நடந்து சென்றுகொண்டிருந்தபோது, லெட்சுமியின் கழுத்தில் கிடந்த கவரிங் நகையை, தங்க செயின் என நினைத்து, இரு இளைஞர்கள் பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். அவர்களை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து, சாயல்குடி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் மண்டலமாணிக்கம் முத்துப்பட்டியைச்சேர்ந்த முத்தமிழ்ச்செல்வன் (24), அஜித் (எ) விக்னேஸ்வரன் (23) என்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல் ஆய்வாளர் ஜோக்கிம் ஜெர்ரி வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.