முகப்பு
ராமநாதபுரம்

பெண்ணைத் தாக்கிய 3 பேர் மீது வழக்கு

திருவாடானை அருகே பெண்ணை தாக்கிய 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On : 9 ஜூலை, 2018 at 6:51 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

திருவாடானை அருகே பெண்ணை தாக்கிய 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 திருவாடானை அருகே உள்ள பனையகுறிச்சி  கிராமத்தைச் சேர்ந்தவர்  முனீஸ்வரன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முருகேஸ்வரிக்கும் (38), அவர்களது உறவினர்களுக்கும் இடையே நிலத்தகராறில் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு முருகேஸ்வரி வீட்டில் தனியாக இருந்தபோது, அதே ஊரைச் சேர்ந்த வேலுச்சாமி, அவரது  உறவினர்கள் பூரணம், செல்வேந்திரன் ஆகிய 3 பேரும் முருகேஸ்வரியை தாக்கினராம். இதுகுறித்து திருவாடானை காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின்பேரில், வேலுச்சாமி உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து, அவர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.