முகப்பு
ராமநாதபுரம்

பள்ளி அருகே சாலையில் ஆபத்தான பள்ளம்

கமுதி அருகே அரசு பள்ளி முன்புள்ள சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Updated On : 30 மார்ச், 2018 at 1:36 AM
பகிர்:

கமுதி அருகே அரசு பள்ளி முன்புள்ள சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள கோவிலாங்குளம் பகுதியில் ஒரு மாதத்துக்கு முன் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்றது. அப்போது, கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி முன்புள்ள சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.  இதனால், கமுதியில் இருந்து சாயல்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர், வாலிநோக்கம், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் அரசு, தனியார் பேருந்துகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தை சந்திக்க 
நேரிடுகிறது. 
மேலும், பள்ளி முன்பாக பள்ளம் உள்ளதால், மாணவர்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக இந்த பள்ளத்தை மூடி சீர்படுத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.