மத்திய அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ரயில் மறியல்ராமேசுவரம், மார்ச் 29: உச்சநீதிமன்றம் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டும், அதற்கான நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து, ராமேசுவரம் ரயில் நிலையத்தில் திருச்சி ரயிலை வியாழக்கிழமை மறிக்க சென்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர். தமிழக டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள காவிரி நீரை வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் காவேரி மேலாண்மை வாரியம் மார்ச் 30-ஆம் தேதிக்க
மத்திய அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ரயில் மறியல்ராமேசுவரம், மார்ச் 29: உச்சநீதிமன்றம் காவேரி மேலாண்மை வாரியம்
மத்திய அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ரயில் மறியல்
ராமேசுவரம், மார்ச் 29: உச்சநீதிமன்றம் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டும், அதற்கான நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து, ராமேசுவரம் ரயில் நிலையத்தில் திருச்சி ரயிலை வியாழக்கிழமை மறிக்க சென்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர்.
தமிழக டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள காவிரி நீரை வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் காவேரி மேலாண்மை வாரியம் மார்ச் 30-ஆம் தேதிக்குள் அமைக்க உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரிய அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை,
இதனை கண்டித்து, ராமேசுவரத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் ராமேசுவரம் வரும் திருச்சி ரயிலை மறிக்கச் சென்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் ரயில் நிலையத்திற்குள் நுழைந்த இந்து மக்கள் கட்சியினரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
மாவட்ட செயலாளர் குருசர்மா, நகர பொதுச்செயலாளர் நம்புகார்த்திக் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.