கமுதி பகுதியில் அழிந்து வரும் விவசாய பண்ணை குட்டைகள்!
கமுதி பகுதியில் விவசாயத்திற்காக அமைக்கபட்ட பண்ணைக் குட்டைகள் மண் மேடாகி உருக்குலைந்து வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கமுதி பகுதியில் விவசாயத்திற்காக அமைக்கபட்ட பண்ணைக் குட்டைகள் மண் மேடாகி உருக்குலைந்து வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கமுதி பகுதிகளில் தரிசு, புறம்போக்கு நிலங்களிலிருந்து வீணாகும் மழை நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தி, தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் விவசாய நிலங்களுக்கு அருகே 30 மீட்டர் நீள, அகலம் கொண்ட பண்ணை குட்டைகள் அரசு மானியத்தில் அமைக்கபட்டன. சிறிதளவு மழை நீரைக்கூட சேமித்து, மகசூல் காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கி மகசூல் பெறலாம் என விவசாயிகளும் ஆர்வத்துடன் பண்ணைக்குட்டைகளை அமைத்து பயனடைந்து வந்தனர். இந்நிலையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மழை இல்லாததால், பண்ணைக் குட்டைகள் மண் மேடுகளாய் உருமாறி அழிந்து வருகின்றன. இதனால், விவசாயத்திற்கு போதிய தண்ணீரில்லாத நிலையில் விவசாயம் செய்ய முடியாமல் இழப்பை சந்தித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கோடை மழை ஆரம்பிக்கும் முன் விவசாய பண்ணை குட்டைகளை சீரமைக்க மானியம் அல்லது வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.