முகப்பு
ராமநாதபுரம்

காக்கூர் கிராமத்தில் குடிநீரின்றி பொதுமக்கள் அவதி

முதுகுளத்தூர் அருகே உள்ள காக்கூர் கிராமத்தில் குடிநீரின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Updated On : 14 மே, 2018 at 11:55 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

முதுகுளத்தூர் அருகே உள்ள காக்கூர் கிராமத்தில் குடிநீரின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட காக்கூர் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடிநீர் பற்றாக்குறையால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொதுமக்கள் குடிநீர் தொட்டி அருகே விடிய விடிய வரிசையில் நிற்கின்றனர். இதனால் பெண்கள் கூலி வேலைக்கும், வெளியூர்களுக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. தண்ணீர் வராதபோது காலி குடங்களை வரிசையில் வைத்து இடம் பிடிக்கின்றனர்.
தண்ணீர் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் வருகிறது. மேலும், சுற்றுவட்டார கிராமங்களிலும் இதே நிலை தான் உள்ளது. எனவே, காக்கூர் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.