ராமநாதபுரம்

முதுகுளத்தூர் அருகே இரு தரப்பினரிடையே மோதல்: 50 பேர் மீது வழக்கு

DIN

முதுகுளத்தூர் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, இரு தரப்பையும் சேர்ந்த 50 பேர் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
    ராமநாதபுரம்  மாவட்டம், புளியங்குடி கிராமத்தில் ப்ளக்ஸ் போர்டு வைப்பதில் இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அக்கிராமத்தில் பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.
     இந்நிலையில், புளியங்குடி கிராமத்தில் வியாழக்கிழமை உடல்நிலை சரியில்லாமல் ராமன் (65) என்பவர் இறந்தார். இறுதிச் சடங்குக்காக செம்பு தண்ணீர் எடுக்க உறவினர்கள் ஊருணிக்குச் சென்றுள்ளனர். இதை, மற்றொரு தரப்பினர் தண்ணீர் எடுக்கக் கூடாது என தடுத்து வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி பொது இடத்தில் கற்களை கொண்டு வீசியதில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தனிப்பிரிவு காவலர் மாடசாமி தலையில் பலத்த ஏற்பட்டது. உடனே அவரை, முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
  இதையடுத்து, சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, பரமக்குடி சார்-ஆட்சியர் விஷ்ணுசந்திரன் மற்றும் வட்டாட்சியர் மீனாட்சி ஆகியோர், கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.    தற்போது, அக்கிராமத்தில் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையில், 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
    இச்சம்பவம் குறித்து  புளியங்குடியைச் சேர்ந்த கூத்தன் மகன் சண்முகவேல் அளித்த புகாரின்பேரிலும், மற்றொரு தரப்பில் ராமர் மகன் வையுடையான் மற்றும் காவலர் மாடசாமி அளித்துள்ள புகாரின்பேரிலும், இரு தரப்பையும் சேர்ந்த 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT