கேரளத்தில் மீன்பிடிக்கச் சென்ற மகன் மாயம்: ஆட்சியரிடம் பெற்றோர் புகார்
கேரளத்தில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன தனது மகனைக் கண்டுபிடித்து தருமாறு, பெற்றோர்
கேரளத்தில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன தனது மகனைக் கண்டுபிடித்து தருமாறு, பெற்றோர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவிடம் மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு,
மண்டபம் அருகே வேதாளை கிராமத்தைச் சேர்ந்த முருகராஜ் மற்றும் இவரது மனைவி வெள்ளையம்மாள் வந்திருந்தனர். இவர்கள், மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவை சந்தித்து, கேரளத்தில் மீன்பிடிக்கச் சென்ற தங்களது மகனைக் காணவில்லையெனவும், அவரைக் கண்டுபிடித்து தருமாறும் கூறி மனு அளித்தனர்.
அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: எங்கள் மகன் கோவிந்தராஜ் (26) கடந்த 11 ஆம் தேதி கேரளத்தில் கொல்லம் பகுதியில் மீன்பிடி கூலி தொழில் செய்ய சென்றார்.
மறுநாள், கொல்லம் பகுதியில் 14 பேருடன் மீன்பிடிக்கச் சென்ற போது, கடலில் தவறி விழுந்து விட்டதாக தகவல் வந்தது. அவர் உயிருடன் இருக்கிறாரா என்றே தெரியவில்லை.
எனவே, காணாமல்போன எங்களது மகனை கண்டுபிடித்து தாருங்கள் என அதில் தெரிவித்துள்ளனர்.