ராமநாதபுரம்

பரமக்குடி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

DIN


பரமக்குடி பேருந்து நிலையத்தில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமக்குடி பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் பொதுமக்களின் நலன்கருதி நகராட்சி நிர்வாகம் சார்பில் அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படும் ராமநாதபுரம், முதுகுளத்தூர், மதுரை, காரைக்குடி செல்லும் பேருந்துகள் நிறுத்தத்துக்கென தனித்தனியே இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பேருந்துகள் நிற்கும் பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் முன்பு பயணிகளின் வசதிக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் முழுவதும் தெருவோரக் கடை மற்றும் பூக்கடை வியாபாரிகள், நகராட்சி கடைகளை வாடகைக்கு எடுத்துள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயனிகள் நிற்கக் கூட வழியின்றி மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையில் மின்விசிறி மற்றும் மின் விளக்குகள் முறையாக பராமரிக்காததால் அந்த அறையை பயன்படுத்த முடியாமல் தாய்மார்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
முதல்நிலை பேருந்து நிலையமாக தரம் உயர்ந்துள்ள பரமக்குடி பேருந்து நிலையத்தை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுப்பதுடன் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்ற மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT