ராமநாதபுரம்

மண்டல விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு: லயன்ஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

DIN


மண்டல விளையாட்டுப் போட்டிகளுக்கு தேர்வு பெற்ற பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை, பள்ளி கல்விக்குழு சனிக்கிழமை பாராட்டி கௌரவித்தது.
பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் 19 வயதுக்குள்பட்ட ஒற்றையர் மேசைப்பந்து போட்டியில் என்.முகமது இர்பான்கான் முதலிடமும், 17 வயதுக்குள்பட்ட பிரிவில் எஸ்.முகம்மது இர்பான் முதலிடம் பிடித்தனர்.
14 வயதுக்குள்பட்ட மாணவிகள் பிரிவில் பூப்பந்து போட்டியில் முதலிடமும், 17 வயதுக்குள்பட்ட பீச்வாலிபால் போட்டியில் ஜி.வைஷ்ணவி மற்றும் ஆர்.ஹரினி ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஐ.லோகதர்ஷினி முதலிடம் பிடித்தார்.
14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பீச் வாலிபால் போட்டி,
கேரம் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டி, வளைபந்து போட்டி, கைப்பந்து போட்டி, 19 வயதுக்குட்பட் கேரம் ஒற்றையர் போட்டி, வாலிபால் போட்டி, சதுரங்கம் போட்டி, பீச் வாலிபால் போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் இரண்டாமிடம் பிடித்தனர். வெற்றிபெற்ற மாணவ-மாணவிகள் மண்டல விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் து.சரவணக்குமார், கே.கருப்பையா, கே.வளர்மதி, சி.புவனேஸ்வரி ஆகியோரை பள்ளி கல்விக்குழு தலைவர் ஏ.வி.குமாரசாமி, செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன்,
பொருளாளர் எம்.மனோகரன், பள்ளி முதல்வர் பி.சோபனாதேவி மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் பாராட்டி கெளரவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT