ராமநாதபுரம்

தடுப்பணை கட்ட மணல் திருட்டு விசாரணை நடத்த கோரிக்கை

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பாலாற்றில் மணல் திருடி தடுப்பணை கட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.  
திருப்பத்தூர் அருகே மணக்குடி மற்றும் மாங்குடிக்கும் இடைப்பட்ட பாலாற்றுப் பகுதியில் ரூ.2.5 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறையினரால் தடுப்பணை கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்தப்பணிக்காக ஆற்றின் கரைப்பகுதியில் திருட்டு மணல் மூலம் கட்டுமானப்பணி நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதனையறிந்த, மணக்குடி கிராமத்தினர் எதிர்ப்புதெரிவித்து எச்சரித்துள்ளனர்.  ஆனால், அதை பொருட்படுத்தாத  ஒப்பந்ததாரர் தொடர்ந்து அதே பகுதியில் மணல் திருடி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஆற்றில் சுமார் 18 அடி ஆழத்துக்கு தோண்டி மணல் எடுக்கப்பட்டுள்ளது.   
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அப்பகுதியில் மணல் திருடுவதைகண்ட கிராமத்தினர் அங்கிருந்த வாகனத்தை முற்றுகையிட்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு திருப்பத்தூர் காவல் ஆய்வாளர் கீதா தலைமையில் போலீஸார் சென்றுள்ளனர். 
அப்போது, மணல் திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 
பின்னர் மணல் திருடப் பயன்படுத்திய டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். டிப்பர் லாரி  உரிமையாளர் நாகரெத்தினம்(49) மற்றும் ஓட்டுநர் பெரியசாமி(29) ஆகியோர் மீது கண்டவராயன்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
இந்த மணல் திருட்டு குறித்து கண்டவராயன்பட்டி போலீஸார், கனிமவள துறையினருக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி தகவல் தெரிவித்துள்ளனர். மணல் திருட்டுக்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனரா என விசாரிக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே  விளக்கனேந்தல் ஊராட்சி புல்வாய்க்குளம் கிராம விவசாய நிலங்களில் அனுமதியின்றி மணல் அள்ளுவது குறித்து வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எநத விதமான நடவடிக்கையும் எடுக்காததால் புதன்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் மனு கொடுத்துள்ளனர்.
மணல் அள்ளுவதை தடுக்க தனிப்படை அமைத்து  நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியருக்கு அக்கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதோஷ வழிபாடு

கசங்கிய ஆடையும் உலகைக் காக்கும்!

கோயில் விழா நடத்த இடம் ஒதுக்காமல் பூங்கா அமைத்ததற்கு எதிா்ப்பு

சாலையோர தடுப்பில் பைக் மோதி விபத்து: ஐடிஐ மாணவா் பலி

தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து மிரட்டல் விடுத்த 5 போ் கைது

SCROLL FOR NEXT