ராமநாதபுரம்

தேவிபட்டிணம் பேருந்து நிலைய சாலை செப்பனிடப்படுமா?

DIN

ராமநாதபுரம் அருகேயுள்ள தேவிபட்டிணம் பேருந்து நிலையச் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இச்சாலை செப்பனிடப்படவில்லையாம். இந்நிலையில் சாலை குண்டும், குழியுமாக மாறி வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் சாலையை ஒட்டியுள்ள கடைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி தொற்றுநோய் பரவும் அபாய நிலை இருந்து வருவதாக தெரிவித்தனர். 
இது குறித்து தேவிபட்டிணம் ஊராட்சி மன்ற அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த பயனும் இல்லையாம்.
பேருந்து நிலையத்தில் பூக்கடை நடத்தி வரும் இளமுருகு என்பவர் கூறியது:
கடந்த 5 ஆண்டுகளாக தேவிபட்டிணம் பேருந்து நிலையத்துக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக இருக்கிறது. தேவிபட்டிணத்தில் நவபாஷாண திருக்கோயில் இருப்பதால் சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. தேவிபட்டிணத்துக்கு வரும் வெளிமாவட்ட பக்தர்கள் பலரும் பேருந்து நிலைய நுழைவு வாயில் பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை பார்த்து முகம் சுளிக்கின்றனர். 
சாலையோரத்தில் தேநீர்க் கடைகள் நடத்தி வருபவர்களும் கழிவுநீரை சாலையின் மையப்பகுதியிலேயே கொட்டி விடுவதால்  எப்போதும் சாலையில் கழிவு நீர் தேங்கி  நிற்கிறது. 
இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை 
எடுக்கவில்லை. இச்சாலையை உடனடியாக செப்பனிட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீரை சிக்கனமாக பயன்டுத்த தென்காசி நகா்மன்றத் தலைவா் வேண்டுகோள்

சுரண்டை பீடித்தொழிலாளா் மருத்துவமனையில் மே தின விழா

சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் 1008 அக்னிச்சட்டி ஊா்வலம்

கல்குவாரி வெடி விபத்து: நிவாரணம் வழங்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் தாமதம்: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT