ராமநாதபுரம்

சத்திரக்குடி அருகே கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

DIN

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே மணல் திருட்டு குறித்து தகவல் அளித்த கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரை தாக்கிய 4 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனர்.
சத்திரக்குடி அருகே முதலூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தவலியான் மகன் கண்ணன்(42). 
இவர் அதே ஊரில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்கிராமத்தில் நடைபெற்ற மணல்  திருட்டு குறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். 
இதில் அவர் மீது சிலருக்கு முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று கண்ணனை அதே கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டி மகன் பாலாஜி, கிருஷ்ணசாமி மகன் சாத்தக்கண்ணன், ராமசாமி மகன் குள்ளமணி என்ற மகேஷ், வீரபாண்டி மகன் மகேஷ் ஆகிய 4 பேரும் உருட்டுக் கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
இதுகுறித்து சத்திரக்குடி காவல் நிலையத்தில் கண்ணன் அளித்த புகாரின் பேரில் 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT