ராமநாதபுரம்

வாக்குசாவடிகளுக்கு இயந்திரங்களை அனுப்பும் பணி: ஆட்சியர் ஆய்வு

DIN


முதுகுளத்தூரில் வாக்குசாவடி மையங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ்  வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். 
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 383 வாக்குசாவடி மையங்கள் அமைக்கபட்டுள்ளன. வாக்குசாவடி மையங்களுக்கு இயந்திரங்களை பிரித்து அனுப்பும் பணி மற்றும் இயந்திரங்களில் வேட்பாளர் சின்னம், பெயர் ஒட்டும் பணி  முதுகுளத்தூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்  நடைபெற்றது. 
இவற்றை மாவட்ட தேர்தல் அலுவலர் கொ.வீரராகவராவ் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது முதுகுளத்தூர்  வட்டாட்சியர் மீனாட்சி பரமசிவன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT