ராமநாதபுரம்

பாம்பன் பாலத்தில் சூறை காற்று: 3 ஆவது நாளாக மதுரை, சென்னை ரயில்கள் மண்டபத்திலிருந்து இயக்கம்: தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பு

DIN

பாம்பன் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை பலத்த சூறை காற்று வீசியதால் ராமேசுவரம் - மதுரை, ராமேசுவரம் - சென்னை இடையே இயக்கப்படும் 2 ரயில்கள் மூன்றாவது நாளாக மண்டபத்திலிருந்து இயக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காற்றின் வேகம் குறைந்ததைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் இயக்கப்பட்ட ரயில்கள் ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு சென்றன. 
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் 58.2 கிலோ மீட்டர் வேகத்தில் சூறை காற்று வீசி வருவதால் கடந்த 3 நாள்களாக ராமேசுவரத்திலிருந்து ஒரு சில ரயில்கள் இயக்கப்படாமல் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை  மாலையும் காற்றின் வேகம் குறையாமல் இருந்ததால் ராமேசுவரத்தில் இருந்து இயக்க வேண்டிய ராமேசுவரம் - மதுரை பயணிகள் ரயில்கள், ராமேசுவரம் - சென்னை அதி விரைவு  ரயில் ஆகிய இரண்டு ரயில்கள் பயணிகள் இன்றி மண்டபம் வரை கொண்டு செல்லப்பட்டது. பின்னர் ராமேசுவரத்தில் இருந்து ரயில் பயணிகள் 6 சிறப்பு பேருந்துகள் மூலம் மண்டபம் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டது. 
இதனையடுத்து பாம்பன் பாலத்தில் காற்றின் வேகம் சற்று குறைந்தவுடன் இரவு 8.15 மணிக்கு இயக்கப்படும் ராமேசுவரம்- சென்னை சேது விரைவு ரயில், இரவு 11 மணிக்கு இயக்கப்படும் ராமேசுவரம் - அஜ்மீர் அதிவிரைவு ரயில் ஆகிய இரண்டு ரயில்கள் காலதாமதமாக ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்பட்டது.
இதேபோல் தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பு காரணமாக சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல ஞாயிற்றுக்கிழமை தடை விதிக்கப்பட்டது.
மன்னார் வளைகுடா பகுதியில் கடந்த மூன்று நாள்களாக தொடர்ந்து பலத்த காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தனுஷ்கோடியில் மணல் புயல் வீசுவதால் சாலையை மணல் மூடி வருகிறது. மேலும் தனுஷ்கோடி பாலம் பகுதியில் சீறிப்பாயும் அலை பாலத்தில் மீது மோதி 20 அடி உயரத்திற்கு எழும்புவதால்  பாதுகாப்பு கருதி அந்த பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு காவல்துறையினர் தடை விதித்தனர். இருப்பினும் அலையின் வேகத்தை காண சுற்றுலாப் பயணிகள் அந்த பகுதியில் அதிகளவில் குவிந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT