ராமநாதபுரம்

அரசுப் பள்ளிகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு

DIN

ராமநாதபுரம் அருகேயுள்ள அரசு அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆட்சியர் கொ.வீரராகவராவ் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வை மேற்கொண்டார்.
ராமநாதபுரம் ஒன்றியம் வெண்ணத்தூர் கிராமத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை பார்வையிடுவதற்காக ஆட்சியர் கொ.வீரராகவராவ் சென்றார். அப்போது அவ்வழியில் இருந்த நாரணமங்களம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை அவர் பார்வையிட்டார். 
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் வகுப்பறைகள் மற்றும் முதல் வகுப்பு குழந்தைகளிடம் பாடம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் கழிப்பறையைச் சென்று பார்வையிட்டார். ஹாஸ்பிடாஸ் மேற்கூரையுடன் போதிய பராமரிப்பின்றி இருந்த அந்த கழிப்பறையை சீரமைக்க அவர் உத்தரவிட்டார். 
பின்னர் அங்கிருந்த அங்கன்வாடி மையத்துக்குச் சென்ற ஆட்சியர், உணவுப் பொருள்கள் இருப்பு குறித்தும், குழந்தைகள் விவரம், அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

SCROLL FOR NEXT