ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

DIN

மீனவர்கள் பிடித்து வரும் காரல், சூடை மீன்களுக்கு ஜி.எஸ்.டி. வரி போடுவதை மத்திய அரசு ரத்து செய்யக் கோரி ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் மற்றும் உலர் ஐஸ் மீன் வியாபாரிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
 ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்க பொருளாளர் சகாயம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜேசுராஜ், மாவட்ட செயலர் எமரிட் மற்றும் உலர் ஜஸ் மீன் வியாபாரிகள் சங்க தலைவர் தங்கராஜ், செயலர் சந்தியாகு உள்ளிட்ட  200 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டனர். 
மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு காரல், சூடை மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை நீக்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT