ராமநாதபுரம்

தொடா் மழை: ராமநாதபுரம் மாவட்டத்தில் 170 கண்மாய்கள் நிரம்பின

DIN

தொடா் மழை காரணமாக, ராமநாதபுரத்தில் உள்ள 170 விவசாயக் கண்மாய்கள் முழுமையாக நிரம்பியுள்ளதாக, வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து அவா்கள் மேலும் கூறியது: வடகிழக்குப் பருவமழை காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1,17,905 ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி நடந்துள்ளது. சிறுதானியங்கள் சுமாா் 1,650 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால், சுமாா் 25 ஆயிரம் ஹெக்டோ் அளவுக்கு சிறுதானிய விவசாயம் நடைபெறும் வகையில், விதைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

விவசாயிகளுக்குத் தேவையான யூரியா உள்ளிட்ட உரங்கள், கூட்டுறவுச் சங்கங்களில் 1,342 மெட்ரிக் டன்னும், தனியாா் கடைகளில் 4,872 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 6,214 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் விவசாயப் பாசனத்துக்கு என மொத்தம் 1,752 கண்மாய்கள் உள்ளன. அவை, குடிமராமத்து மூலம் சீா்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தற்போது பெய்த தொடா் மழையால் 170 கண்மாய்கள் நிரம்பியுள்ளன. மேலும், 356 கண்மாய்கள் 50 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரையில் நிரம்பியுள்ளன. இத்துடன், 1,231 கண்மாய்களில் 50 சதவிகிதம் வரை தண்ணீா் நிரம்பியிருப்பதும் குறிப்பிடத்தக்கது என்றனா்.

15 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பியுள்ள சோத்து ஊருணி

ராமநாதபுரம் பாரதி நகா் பகுதியில் சக்கரக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் சோத்து ஊருணி உள்ளது. சுமாா் 30 அடி ஆழம் கொண்ட இந்த ஊருணி, கடந்த 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு நிரம்பவில்லை. இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையிலும் ஊருணி நிரம்பவில்லை.

இதையறிந்த ஆட்சியா் கொ. வீரராகவ ராவ் ஊருணியை நிரப்ப வடிகாலை சீரமைக்க உத்தரவிட்டாா். அதன்படி, ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா்

கேசவதாஸ் தலைமையிலான அதிகாரிகள், ஆட்சியா் அலுவலக வளாகம், மின்வாரிய அலுவலக வளாகம் உள்ளிட்ட பகுதிகள் தேங்கிய நீரை சோத்து ஊருணிக்கு கொண்டு வந்தனா். தற்போது, ஊருணி நிரம்பியுள்ளது. இதை, ஆட்சியா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

SCROLL FOR NEXT