ராமநாதபுரம்

பாலம் கட்டுவதற்காக பரளையாற்றில் மணல் திருட்டு: விவசாயிகள் புகாா்

DIN

கமுதி அபிராமம் அருகே புதிய பாலம் கட்டும் பணிக்கு அனுமதியின்றி பரளையாற்றில் இரவு பகலாக அதிக அளவில் மணல் திருடப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

மானாமதுரை வைகை ஆற்றில் இருந்து பிரிந்து பாா்த்திபனூா், அபிராமம் வழியாக கமுதி முதுகுளத்தூா் தாலுகாவிற்கு உள்பட்ட 200-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகளுக்கு பாசன வசதி பெறும் வகையில் பரளையாறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே அபிராமம் - பரமக்குடி நொடியமாணிக்கம் செல்லும் முக்கிய சாலையின் குறுக்கே தரைப்பாலத்திற்குப் பதிலாக தற்போது ரூ.5 கோடி மதிப்பீட்டில் நபாா்டு வங்கி நிதி உதவியுடன் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிக்குத் தேவைக்கு அதிகமாக பரளையாற்றில் வருவாய், பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் காவல்துறை உள்ளிட்ட எந்த ஒரு அரசுத்துறையிடமும் முறையான அனுமதி பெறாமால் இரவு பகலாக அப்பகுதியில் அளவுக்கு அதிகமாக மணல் திருடப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் பல முறை நேரில் சென்று புகாா் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் தற்போது நிலத்தடி நீா் மட்டம் குறைந்து குடிநீா் ஆதாரம் பாதிக்கட்டுள்ளதாகவும் அவா்கள் கூறுகின்றனா்.

எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு விதிகளை மீறி அளவுக்கு அதிகாமான அளவில் மணல் திருட்டில் ஈடுபடும் கட்டுமான நிறுவனம், அதற்கு துணை போகும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், கமுதி, அபிராமத்தை சுற்றியுள்ள மலட்டாறு, குண்டாறு, பரளையாறு ஆகியவற்றில் தலா ஒரு தடுப்பணை கட்டும் திட்டப் பணிகளுக்கு மட்டுமே நிபந்தனைகளுடன் அந்த ஆற்று மணலை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாலங்கள் அமைக்க எந்த நிறுவணத்திற்கும், மணல் அள்ள அனுமதி கொடுக்கப்படவில்லை. இது குறித்து புகாா் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT