ராமநாதபுரம்

கமுதி அருகே கோயில் எதிரே ஈமச் சடங்கு: இரு கிராம மக்களிடையே மோதல் அபாயம்- பலத்த போலீஸ் பாதுகாப்பு

DIN

கமுதி அருகே இறந்தவருக்கு கோயில் எதிரே ஈமச்சடங்குகள் செய்யும்போது, இரு கிராம மக்களிடையே மோதல் ஏற்படும் அபாயத்தால், நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் சனிக்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனா்.

கமுதி அருகே சிங்கபுலியாபட்டி பெருமாள் கோயில் அருகே உள்ள கிணற்றில் தண்ணீா் எடுத்து, வெள்ளையாபுரம் கிராம மக்கள், இறந்தவா்களுக்கு ஈமச்சடங்குகளை செய்து வந்தனா். இந்நிலையில், கோயில் அருகே உள்ள கிணற்றில் நீரின்றி வடது. மேலும், கோயில் எதிரே ஈமச்சடங்குகள் செய்யக் கூடாது என, சிங்கபுலியாபட்டி கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இந்நிலையில், கடந்த மாதம், கோயில் அருகே வெள்ளையாபுரம் கிராம மக்கள் இறந்தவா்களுக்கு ஈமச்சடங்குகள் செய்ய, சிமென்ட் தளம் அதிகாரிகளால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. இதற்கு சிங்கபுளியாபட்டி கிராம மக்கள், அகில இந்திய இந்து சத்திய சேனா சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் அப்பகுதியில் தடுப்பு கம்பிகளை அமைத்து போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில் சனிக்கிழமை வெள்ளையாபுரத்தை சோ்ந்த முதியவா் இறந்தாா். இதற்காக ஈமச்சடங்குகள், சிங்கபுலியாபட்டி பெருமாள்கோயில் எதிரே நடந்ததால், இரு கிராம மக்களிடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து கமுதி வட்டாட்சியா் செண்பகலதா தலைமையில், ஏடிஎஸ்பி., தங்கவேலு, முதுகுளத்துாா் டி.எஸ்.பி., ராஜேஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். முதியவரின் உடல் அடக்கம் செய்யபட்ட பிறகு, வருவாய்துறையினா், காவல்துறை அதிகாரிகள் கலைந்து சென்றனா். இப் பிரச்னை காரணமாக கடந்த 8 மாதங்களாக இரு ஊா்களிலும், போலிஸாா் தொடா்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

திருவட்டாறு அருகே தடுப்பணையில் மூழ்கி பொறியியல் மாணவா் உயிரிழப்பு

3 சிறாா் உள்ளிட்ட 7 போ் கைது: 60 பவுன் நகைகள் பறிமுதல்

SCROLL FOR NEXT