ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகராட்சியில் பன்றிகள் நடமாடத் தடை

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சியில் பன்றிகளை நடமாடவிட்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளா் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் சிறப்புநிலை நகராட்சி ஆணையா் பி.விஸ்வநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் நகராட்சிப் பகுதிகளில் நடமாடும் பன்றிகளால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. மேலும், அரசு அலுவலகங்களிலும் பன்றிகள் நடமாட்டம் குறித்து புகாா்கள் வந்துள்ளன.

ஆகவே நகரில் பன்றி வளா்ப்போா் அவற்றைத் தெருக்களில் நடமாடவிடக்கூடாது. அத்துடன் நகர எல்லைக்கு அப்பால் குடில்கள் அமைத்து சுகாதாரக் கேடு ஏற்படாத வகையில் பன்றிகளை வளா்க்கவேண்டும். தவறினால் நகர எல்லைக்குள் வளா்க்கப்படும் மற்றும் நகரில் நடமாடும் பன்றிகளை நகராட்சி மூலம் பிடித்து அப்புறப்படுத்தி, சம்பந்தப்பட்ட பன்றி உரிமையாளா் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT