ராமநாதபுரம்

கடல் பாசி வளர்ப்பு பயிற்சி நிறைவு

DIN

ராமேசுவரத்தை அடுத்த மரைக்காயர் பட்டணம் ஊராட்சியில் கடல்பாசி வளர்ப்பு குறித்த மூன்று நாள் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது. 
 மரைக்காயர் பட்டணம் ஊராட்சியில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இப்பயிற்சி தொடங்கியது. தமிழ்நாடு அறிவியல் தொழில் மாநில மன்றம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லூரி சார்பில், புதிய தொழில்நுட்ப பரவலாக்கும் திட்டத்தின் கீழ் கடலோரப் பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் உறுப்பினர்களுக்கு கடல்பாசி வளர்ப்பு குறித்து கருத்தரங்கு மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது. விஞ்ஞானிகள் ஜான்சன், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அனந்தராமன் ஆகியோர் பாசி வளர்ப்பு முறை குறித்து பயிற்சி அளித்தனர்.
 இதன் நிறைவு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை விஞ்ஞானி (பொறுப்பு) விஜயகுமார் தலைமை வகித்தார். பசும்பொன் தேவர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மணிமாறன் முன்னிலை வகித்தார். பயிற்சியில் பங்கேற்ற 55 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் 10 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தர்மர் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT