ராமநாதபுரம்

தேநீர் கடையில் பணிபுரிந்த 11 வயது சிறுவன் மீட்பு

DIN


தேநீர் கடையில் பணியில் இருந்த 11 வயது சிறுவனை, ராமநாதபுரம் மாவட்டத் தொழிலாளர் நலத் துறையினர் வெள்ளிக்கிழமை மீட்டனர்.
ராமநாதபுரம் கழுகூரணி என்ற பகுதியில் தொழிலாளர் நலத் துறை அதிகாரி சங்கர் தலைமையில், தனிக் குழுவினர் தனியார் நிறுவனங்கள், கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, தேநீர் கடை ஒன்றில் 11 வயது சிறுவன் பணியிலிருந்தது கண்டறியப்பட்டது. சிறுவனை மீட்ட அதிகாரிகள், தேநீர் கடை உரிமையாளரிடமும் விசாரணை நடத்தினர். மீட்கப்பட்ட சிறுவனுக்கு சட்டப்படி அனைத்து சலுகைகள் மற்றும் எதிர்காலத்துக்கான உதவிகள் வழங்கப்படும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT