ராமநாதபுரம்

வங்கியில் நகைக் கடன் வட்டி அதிகமானதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை முயற்சி

DIN

கடலாடி அருகே வங்கியில் வைத்த நகை கடனுக்கு வட்டி அதிகமானதால் விவசாயி பூச்சி மருந்து குடித்து திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்றார். 
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஆப்பனூரைச் சேர்ந்த அய்யா மகன் ஜோதிமுருகன்(45). இவரது மனைவி கெங்காதேவி. இவர்கள் இருவரும் தங்கள் வயலில் விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் விவசாயம் செய்வதற்காக இருவரும் கடலாடி வங்கியில் விவசாயக் கடன் திட்டத்தில் தனித்தனியாக நகையை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். தற்போது பருவமழை இல்லாததால் விவசாயத்தில் போதுமான வருமானம் கிடைக்கவில்லை. இதனால் வங்கியில் அடகு வைத்த நகையை திருப்ப முடியவில்லை. 
இந்நிலையில், நகையை திருப்பக்கோரி வங்கியில் இருந்து வீட்டிற்கு நோட்டீஸ் வந்துள்ளது. இதனால் ஜோதிமுருகன் பெயரில் வாங்கிய பணத்திற்கு வட்டி செலுத்தி வந்துள்ளனர். கெங்காதேவியின் பெயரில் வைத்த நகைக்கும் வட்டி கட்டுமாறு நோட்டீஸ் வந்துள்ளது. வட்டி அதிகரித்ததால் இனிமேல் நகையை திருப்ப முடியாது என மனமுடைந்த ஜோதிமுருகன் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்தாராம். மயக்க நிலையில் இருந்தவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதுகுளத்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT