ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் "ஜாக்டோ-ஜியோ' ஆர்ப்பாட்டம்

DIN

ராமநாதபுரத்தில் "ஜாக்டோ-ஜியோ' கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளோடு இணைக்கக்கூடாது. சத்துணவு மையங்களை மூடக்கூடாது. எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை இடைநிலை ஆசிரியர்களைக் கொண்டு நடத்தக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 நீதிமன்ற அறிவுறுத்தல், அரசின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்த போராட்டம், கோரிக்கைகள் நிறைவேறாததால் மீண்டும் தொடங்கும் என "ஜாக்டோ-ஜியோ' அமைப்பினர் அறிவித்திருந்தனர். 
அதைத்தொடர்ந்து ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலரும்,  "ஜாக்டோ-ஜியோ' கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான ஆர்.சிவபாலன் தலைமை வகித்தார். 
அப்போது அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான ஆசிரியைகள், ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில்  "ஜாக்டோ-ஜியோ' கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சோ.முருகேசன், குமாரவேல், ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை அடுத்து போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT