ராமநாதபுரம்

திருவாடானை ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகை

DIN

திருவாடானை அருகே கருப்பூர் கிராமத்தில் குடிநீர் விநியோகம்  பல நாள்களாக நிறுத்தப்பட்டதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் காலி குடங்களுடன் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். 
  திருவாடானை அருகே உள்ள ஆதியூர் ஊராட்சி சேர்ந்த கருப்பூர் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவ்வூருக்கு திருவாடானையில் இருந்து காரங்காடு கிராமம் வழியாக குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு குடி தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
 இந்நிலையில், கடந்த 20 நாள்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் குடிதண்ணீர் இல்லாமல் பல மைல் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். 
இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் குடி தண்ணீர் விநியோகத்தை சரி செய்யாததால் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதனைத்தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் சரி செய்யப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT