ராமநாதபுரம்

பள்ளிகளில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்புவது தொடர்பாக ஆலோசனை

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கல்வித் தொலைக்காட்சியை   ஒளிபரப்பும் வகையில் ஏற்பாடுகள் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.அய்யண்ணன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட அளவில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய முதன்மைக் கல்வி அலுவலர் தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியை பள்ளிகளில் ஒளிபரப்பும் வகையில் கேபிள் இணைப்பு பெறவும், "செட்டாப் பாக்ஸ்' அமைக்கவும், தொலைக்காட்சி இல்லாத பள்ளிகளில் தொலைக்காட்சி வைக்கவும் அறிவுறுத்தினார்.
கல்வித் தொலைக்காட்சிக்கான இணைப்பு பெறுவது குறித்து வட்டாட்சியர் ச.செந்தில்குமார் விளக்கினார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை ஊடக ஒருங்கிணைப்பாளர் கு.காந்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT